NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கால்பந்து மைதான சன நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் சன நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானத்தில் சால்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரில் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதனை காண வந்த இரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும், மைதானத்தினுள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இரசிகர்கள் குறிப்பிட்ட நுழைவு வாயிலை தகர்த்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

ஆயிரக்கணக்கான இரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Share:

Related Articles