NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காவத்தையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள தாயும் மகளும் – பொலிஸ் விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்..!

தாயும், மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இரத்தினபுரி காவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், 28 வயதுடைய இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தில் நேற்றிரவு கைது செய்துள்ளதுடன், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles