NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காஸாவில் பாடசாலை மீது தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு..!

காஸாவில் உள்ள ஷெஜையா என்ற இடத்தில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் படையினர் நேற்று (01) நடத்திய தாக்குதலில் பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த பலஸ்தீனர்கள் 15 பேர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் தெரிவித்ததாவது, பாடசாலை வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், ஹமாஸ் தளபதிகள் மற்றும் அந்த அமைப்பினரின் பதுங்கு குழியாக குறித்த பாடசாலை பயன்படுத்தப்பட்டு வந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles