இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் இறுதியாக இலங்கையில் நடைபெற்றுமுடிந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ள ஓரா அணிக்காக விளையாடியிருந்தனர்.
தம்புள்ள ஓரா அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த போதும், துரதிஷ்டவசமாக பி லவ் கண்டி அணியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை பறிகொடுத்தது.
எனினும் தம்புள்ள ஓரா அணிக்காக விளையாடிய குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் சிறந்த துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இருவரும் இதற்கு முன்னர் உபாதைகளை சந்தித்துவந்திருந்த நிலையில் அதிலிருந்து குணமடைந்து தேசிய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இவர்கள் இருவரில் குசல் பெரேரா மாத்திரம் ஆசியக்கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பிடித்திருந்ததுடன், அவிஷ்க பெர்னாண்டோவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் தற்போது இருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.