NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடும்ப தகராறில் நபரொருவர் உயிரிழப்பு!

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹிபியா ரத்மலை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரரின் மகன் என்பதுடன், உயிரிழந்தவரின் மகனுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles