குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது தொடர்பான சட்ட மடகாஸ்கரில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டில் மாத்திரம் 600 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 133 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது தொடர்பான புதிய சட்டத்தை மடகாஸ்கர் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
அதேநேரம், குறித்த சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கிடையில், மடகாஸ்கர் அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.