NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கூட்டுறவு கைத்தொழில்துறை பலப்படுத்தப்படும் சஜித் தெரிவிப்பு!

கூட்டுறவு கைத்தொழில்துறை பலப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கூட்டுறவு கைத்தொழில் மற்றும் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளின் பலனாகக் கணிசமான அளவு வெற்றி கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரேட் சட்டத்தை ஒத்திவைத்து, பாதாளத்தில் விழுந்த சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்கள் மீண்டெழுவதற்கு வாய்ப்பு வழங்கியமை அவற்றில் முக்கியமான ஒன்றாகக் கருத முடியும் எனவும் கூறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் குறித்த சட்டத்தை மீள அமுல்படுத்த வேண்டி ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பரேட் சட்டத்தை ஒத்திவைப்பதன் ஊடாக மக்களுக்குக் கிடைக்கும் பலன்களைத் தொடர்ந்தும் வழங்குவதற்கான சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த மாநாட்டின்போது, ஐக்கிய மக்கள் சக்திக்கும், 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுறவுச் சங்க தலைவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles