NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைகள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் நபர் கொலை – வீட்டில் இருந்து சடலம் மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில், உயிரிழந்த நபரின் மகள் நேற்று தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் கைகள் கட்டப்பட்டு வாயை மூடும் வகையில் துணி கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போதைய விசாரணைகளின்படி இந்த கொலைச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles