NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (09) 3 படகுகளுடன் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலனிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share:

Related Articles