NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குதொடுவாய்  அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்படும் அபாயம்!




கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

மீண்டும் அகழ்வு பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கப் பெறும் என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ கருத்தை தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என நேற்று (04) கூறியுள்ளதாகவும் அகழ்வு பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே அதிகம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles