மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ருவான்டா நாட்டின் ஆதரவு கொண்ட M 23 என்ற கிளர்ச்சியாளர்கள் குழு, கொங்கோவின் சில பகுதிகளை சுற்றி வளைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதனால் கடந்த மாதம் தொடங்கி அங்கு தொடர் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், தெற்கு கிவூ நகரை M 23 கிளர்ச்சியாளர்கள் குழுவினர் சுற்றி வளைத்து கைப்பற்றியுள்ளதுடன், அங்குள்ள தேவாலயம் ஒன்றில் பதுங்கி இருந்து செயல்பட்டு வந்த கொங்கோ இராணுவ வீரர்களை குறி வைத்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
இதில் இராணுவ வீரர்கள் உட்;பட 70 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.