NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொட்டாவை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொட்டாவை பிரதேசத்தில் உள்ள கல்லூரிக்கு அருகில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.

காலை 8.00 மணியளவில் குறித்த கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வு-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles