கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் தொடர்பான உண்மையான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கவுள்ளதாக, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அன்று, வெல்லவ பொலிஸ் பிரிவின் வாசல அடுக்குமாடி குடியிருப்புகளின் மரலுவாவ பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் குறித்து சரியான தகவல்களை வழங்குபர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உறுதியளித்துள்ளார்.
அதற்கமைய, இந்தக் குற்றம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 859 1244 அல்லது 071 859 1882 என்ற இலக்கத்திற்கு தொடர்புக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.