NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொள்ளுப்பிட்டி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு!

கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles