NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 15 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (07) மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (08) காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பு 11,12,13 மற்றும் கொழும்பு 14,15 ஆகிய பகுதிகளுக்கும் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles