கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் ஒரு கிலோகிராம் கொத்தமல்லி இலை 7000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மலையகத்தின் ஹப்புத்தலை மரக்கறி மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோகிராம் கொத்தமல்லி இலை இன்றைய தினம் (08) 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையிலேயே, கொழும்பில் 7000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் கொத்தமல்லி இலை 1000 ரூபாவிற்கும் குறைவாக கொழும்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவிய சீரற்ற வானிலையின் காரணமாகவே மரக்கறி வகைகளின் விலைகள் சற்று அதிகரித்து காணப்பட்டது.