NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்படும் – கல்வி அமைச்சர்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 9.30 இற்கு ஆரம்பமான நிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா அல்லது குறித்த தினத்தில் நடத்துவதா என்பது தொடர்பில் இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவிதிருந்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையினை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான நேர அட்டவணையும் வெளியிடப்பட்டது.

Share:

Related Articles