2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சை பெறுபேறுகளை னழநநெவள.டம மற்றும் சநளரடவள.நஒயஅள.பழஎ.டம ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 527 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.
அவர்களில் 3 இலட்சத்து 87 ஆயிரத்து 648 பாடசாலை பரீட்சாத்திகளும் 65 ஆயிரத்து 331 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபேறுகளின் அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவ வேண்டுமாயின் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.