NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவன் ஒருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு… !

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் 17 வயது மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சிலாபத்தில் நடந்துள்ளது.

தனது வீட்டில் நேற்றிரவு படித்துக் கொண்டிருந்த குறித்த மாணவன் திடீரெனக் காணாமல் போயுள்ளார். அவரைப் பெற்றோரும் சகோதரர்களும் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றுக்குள் சடலமாகக் கிடந்துள்ளார்.

கிணற்றுக்குள் இருந்து மாணவனின் சடலம் மீட்கப்பட்ட வேளை அவர் பயன்படுத்தும் கைத்தொலைபேசியும் அங்கு காணப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மாணவன் கிணற்றின் மேல் தட்டில் அமர்ந்திருந்து தொலைபேசியில் உரையாடிய போது தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் அல்லது தானே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவனின் பெற்றோரிடமும், சகோதரர்களிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

Share:

Related Articles