NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை கிருமி நாசினிகளுடன் இருவர் கைது..!

புத்தளம் – உச்சமுனை தீவுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை கிருமி நாசினிகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த தீவுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றினை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த டிங்கி இயந்திர படகில் 11 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கிருமி நாசினிகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கிருமி நாசினிகள் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

அத்துடன், குறித்த டிங்கி இயந்திர படகில் இருந்த இருவர் சந்தேகத்தின் பெயரில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles