NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டவர் கைது..!

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக சூட்சமமான முறையில் கப்ரக வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் குறித்த முறியடிப்பு இடம்பெற்றுள்ளது.

சுமார் 60 லட்சம் பெறுமதியான முதிரை குற்றிகளை கடத்திய வாகனச் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதிரைக்குற்றிகள் கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய கப் ரக வாகனத்துடன் சந்தேக நபரையும் நாளை 27.09.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles