NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சதத்தில் சாதனை செய்த முகமதுல்லா!

முன்பை – வான்கடே மைதானத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் தோல்வியடைந்தாலும் முகமதுல்லா சாதனை செய்துள்ளார்.

 பங்களாதேஷின் வெள்ளிக்காக இருதிவரை போராடிய முகமதுல்லா, 111 பந்துகளில் 11 பவுண்டரி ,4 சிக்ஸர்கள் என 111 ரன்கள் குவித்து ஒன்பதாவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். 

உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணி சார்பாக அதிக சதங்களை விளாசிய வீரராக முகமதுல்லா தற்போது மூன்றாவது சதத்தை அடித்து முதலிடத்தில் உள்ளார்.அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் ஏ.பி.டிவில்லியர்ஸுடன் இணைந்து (3 சதங்களுடன்) இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதோடு உலககோப்பை போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை (4 சிக்ஸர்) அடித்த வீரர் என்ற சாதனையும் முகமதுல்லா லிட்டன் தாசுடன் சமன் செய்துள்ளார். 

Share:

Related Articles