NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது’ – கிரியெல்ல

தேர்தல்கள் பிற்போடப்பட்டதன் காரணமாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் கடன் தவணைகளை பெறுவது ஆபத்தானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செய்தியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நீதித்துறையின் மேலாதிக்கத்தை தகர்த்து அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் வழங்கிய அடிப்படை வாக்குறுதிகளில் ஒன்று நீதித்துறையின் மேலாதிக்கத்தை பாதுகாப்பது எனவும் ஆனால் அரசாங்கம் முதல் கடன் தவணையை பெற்று அந்த நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் விதிமுறைகளை அரசாங்கம் மீறியுள்ளதாகவும் இதனால் வழமை போன்று இந்த உடன்படிக்கையை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்களிலும் ஜூன் மாதம் ஐ.எம்.எஃப் அரசாங்கத்துடனான கலந்துரையாடலில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் நியாயமான காரணங்களை தெரிவிக்கத் தவறினால் நிலைமை பாரதூரமாக மாறக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles