NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்!

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் குவிந்துள்ள 130,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

இணையவழி முறையின் ஊடாக நிறுவனத்தில் சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை விஜயத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்குவும் கலந்துகொண்டார்.

Share:

Related Articles