NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிங்கப்பூரில் பாரிய சொத்து பறிமுதல் : வெளிநாட்டவர் கைது !

சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பல் ஓன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகள் மூலம் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்து சொத்துக்கள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க பொலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

சிங்கப்பூர் முழுவதும் ஆர்ச்சார்ட் ரோடு முதல் சென்டோ தீவு வரை 9 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 400 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டான பணம், மற்றும் தங்ககட்டிகள், தங்க நகைகள், விலை உயர்ந்த சொகுசுகார்கள் கைப்பைகளில் இருந்த பல்வேறு மாடல்களில் கைக்கடிகாரங்கள் சிக்கியுள்ளது.

94 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 734.32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 6,100 கோடி) மதிப்பிலான பங்களாக்கள், 50 சொகுசு கார்கள், கட்டுக்கட்டாக பணம், நகைகள், கைக்கடிகாரங்கள்இ சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சீனா, கம்போடியா, சைப்ரஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 31 வயது முதல் 40 வயதுக்குட்டவர்கள் ஆவார்கள்.

இந்த சோதனையின் போது பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த ஒருவர் 2-வது மாடி பால்கனியில் இருந்து குதித்து சாக்கடையில் பதுங்கி இருந்தார், அவரை பொலிஸார்மடக்கி பிடித்தனர். சைபீரியா நாட்டை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் தப்பி ஓட முயன்ற போது காயம் அடைந்தார்.

அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது பங்களாவில் இருந்து 118 மில்லியன் டாலர் மதிப்பிலான 13 சொத்து ஆவணங்கள், 5 வாகனங்கள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். இது தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கும்பலை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் ஒரு நெட்வொர்க் அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய பண மோசடி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில் அதன் தலைவர் வனிந்து ஹஸரங்க வெறும் 09 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு வெற்றியை உறுதி செய்ததோடு, அது LPL போட்டிகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதி சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் மாறியது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் வனிந்து ஹஸரங்க தெரிவாகினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles