NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுமியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

காணாமல் போன 17 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல சீதுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இதன்படி, குறித்த சிறுமி ஜூன் 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், சிறுமியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிறுமியின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெயர் – ஆராச்சிகே கயாத்ரி தேவ்ஷானி சூரியசிங்க
வயது – 17 ஆண்டுகள் 5 மாதங்கள்

சிறுமியின் புகைப்படமும் மேலே காட்டப்பட்டுள்ளது.

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் – 071 8591630
நீர்கொழும்பு பொலிஸ் – 031 2222227

Share:

Related Articles