NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறைக் கைதிகளை திறந்தவெளியில் பார்வையிட அனுமதி..!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளை குடும்பத்தினர் அல்லது விருந்தினர்கள் திறந்தவெளியில் கைதிகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அதன்படி குடுபத்தினர் வருகைகளின் போது ஒவ்வொரு கைதியும் தங்கள் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுஇ இனிப்பு பண்டங்கள் அல்லது சுகாதாரப் பொருட்களை பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களின் படி இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles