NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீன பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் !

கடந்த 2 மாதங்களாக மர்மமான முறையில் மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷாங்ஃபு (படம்) பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பற்றிய கேள்விகளுக்கு சீன அரச தரப்பிலிருந்து சரியான விளக்கம் வழங்கப்படாத நிலையில், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என ஏற்கெனவே ஊடக தகவல்கள் வெளியாகின.

லீ ஷாங்ஃபு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போது சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் காங்கும் இதே போல் மர்மமான பின்னணியில் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles