NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீமெந்தின் விலை குறைகிறது!

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன், ஒரு மூடை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 

 பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (08) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

Share:

Related Articles