NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைக்கா ஞானம் அறக்கட்டளை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை தொடர்ச்சியாக பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகிறது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தில் சிக்குண்டு நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது

அந்த வகையில் புவக் பிட்டிய, இலுக்ஹோவிட்ட மற்றும் கொஸ்வத்த கிராம சேவகர் பிரிவுகளில் லைக்கா ஞானம் அறக்கட்டளையானது நேற்று (04)பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது.

அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள், சமையலறைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை ஞானம் அறக்கட்டளை வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (03) லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது களுத்துறை மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்திருந்தது.

குறித்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு விரைந்த ஞானம் அறக்கட்டளையின் குழுவானது, அப்பகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள், சமையலறைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியது.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளையானது, தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

நாட்டில் தொடர்ச்சியாக இந்தப் பணியை முன்னெடுத்து வரும் லைக்கா ஞானம் அறக்கட்டளை, சர்வதேச அளவிலும் தனது இந்த செயற்பாட்டை விஸ்தரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக் கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.

Share:

Related Articles