NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றாடல் தினத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் இந்த வேளையில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களை அந்த நிலையில் இருந்து மீட்பதே இத்தருணத்தில் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles