NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!

வங்காளம், மராத்தி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ்வாநு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

அதன்பின்னர், 2014 ஆம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதன்மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.

இதேவேளை, செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles