NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செல்லப்பிராணிகள் பேசுவதை கேட்க ஆசையா? – இதோ புதிய தொழிநுட்பம் அறிமுகம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வளர்ந்து வரும் நவீன யுகத்தில் தற்போது தொழில்நுட்ப ரீதியாக நமது அன்றாட செயல்கள் பல விரிவடைந்து கொண்டே செல்கின்றமை நிதர்சனமாகும்.

அந்தவகையில், விஞ்ஞானிகளின் மேலுமொரு புதிய கண்டுபிடிப்பு பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நமது வீட்டில் வளரும நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளையும் பேச வைக்கும் வகையில் புதிய தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

செல்லபிராணிகள் மட்டுமின்றி விலங்குகள் என்ன சொல்ல வருகின்றன என்பதை மனிதர்களுக்கு புரிய வைக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு விரைவில் வர இருக்கிறது.

செல்லபிராணிகள் உள்ளிட்ட சகல விலங்கினங்களுக்கும் உணர்வுகள் மற்றும் தனித்துவமான பண்புகள் இருக்கும் நிலையில், அவை ஒன்றோடொன்று தங்களுக்குள் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில், அவை எழுப்பும் சத்தங்கள், செய்கைகள், நடத்தைகள் போன்றவற்றைக் கொண்டு அவைகள் என்ன நினைக்கின்றன என்பதை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

விலங்குகள், பறவைகளின் மொழிகளை செயற்கை நுண்ணறிவு வாயிலாக புரிந்துக் கொள்ளமுடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உதாரணமாக இந்த ஏ.ஐ தொழிநுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட செயலிகளை உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்துக் கொண்டு குரைக்கும் நாய் பக்கத்திலோ அல்லது ஒலி எழுப்பும் உங்கள் செல்லபிராணிக்கு அருகிலோ கொண்டு சென்றால், அவைகள் நினைப்பதை எழுத்து வடித்தில் அந்த செயலி காட்டிவிடும்.

Share:

Related Articles