சமீபகாலமாக திரைப்படங்களைப்பொறுத்தவரை, திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக பெருமளவில் ப்ரீ பிஸினஸ் மூலமாக தயாரிப்பாளர்கள் பெரும் லாபத்தை அடைந்து வருகின்றனர்.அந்தவகையில் கோட் படம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு Table profit-ஆக அமைந்தது என அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.
மேலும் விஜய் நடித்து வரும் திரைப்படமான ஜனநாயகன் விஜய்யின் கடைசி திரைப்படம் ஆகும்.இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகின்ற இத் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன் மற்றும் ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தின் OTT உரிமை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ள நிலையில் , இத்திரைப்படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது .
ஆனால், அந்த தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளிவரவில்லை. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 80 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக திரைப்பட வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருகின்றது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என கூறப்படப்பிடுகின்றது .