NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பெண் கைது – விசாரணையில் வெளியான தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தமையின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கிண்ணியா – குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஆவார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நபர்களை பொலிஸார் சோதனையிட்ட போது, சந்தேக நபரிடம் இருந்து இந்த இரண்டு அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles