NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். 

பின்னர் மாலை 7.00 மணி முதல் 9.30 வரை தனியார் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்றார்.

5ஆம் திகதி காலையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கான விசேட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 3.00 மணிஸவரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் ஜனாதிபதி, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை யாழ்ப்பாணத்தில உள்ள தனியார் விடுதியில் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

6ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் 10.00 மணிவரையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி அறிவியல் நகர் பீட பீடாதிபதி உள்ளிட்ட விரிவுரையாளர்களை சந்திக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து தொடர்ந்து 10.00 மணிமுதல் 11.30 வரையில் சர்வ மதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்கள் ஆகியவற்றுடன் போதனா வைத்தியசாலையின் நலன்புரி சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

பின்னர் மாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை மாவட்டச் செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது.

7ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன் அதனை முடித்து கொண்டு ஐனாதிபதி கொழும்பு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles