NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் சனத்தொகை வீழ்ச்சி : அவசரநிலையாக அறிவிப்பு

உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றாக காணப்படும் ஜப்பானில் மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சிகரமாக நாட்டில் சுமார் 12.5 கோடி மக்கள்தொகையே பதிவாகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.65 சதவீதம் அதாவது 8 லட்சம் பேர் குறைவு எனவும் கூறப்படுகிறது.

இந்த கணக்கில் ஜப்பான் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் சுமார் 30 லட்சம் வெளிநாட்டினரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நாட்டின் அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் பல கோடி ரூபாவை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles