(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜப்பானில் ஜனவரி முதலாம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிச்டராக பதிவான இந்நிலநடுக்கத்தால்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் நிலப்பரப்பு மேற்கு நோக்கி 130 செ.மீ. வரை நகர்ந்து இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31,800 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.