NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மீண்டும் அழைப்பு…!

இன்றைய தினம் (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நாளைய தினமும் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நேற்று (29) இலங்கை வந்தடைந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், அவர் நாடு திரும்பி  48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலமொன்றை வழங்குமாறு அவருக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்து.

அந்த உத்தரவின்படி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles