NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல்!

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற குறித்த வழிப்பாட்டு தலம் சார்பில் பாடசாலைகள்- கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை அங்கு நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் இந்த வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய வேதிப்பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆலயத்தை கட்டுப்பாட்டு கொண்டு வந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles