NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டிக்டொக்கை தடை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபை

அமெரிக்காவில் டிக்டொக்கை (TikTok) தடை செய்யக்கூடிய சர்ச்சைக்குரிய முக்கிய யோசனைக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

டிக்டொக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸிற்கு (ByteDance) அதன் பங்குகளை விற்க ஒன்பது மாத அவகாசத்தை அளித்துள்ளதுடன், அமெரிக்காவில் அதன் பயன்பாட்டை தடுக்கும் வழியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த யோசனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் (Joe Biden) ஒப்படைக்கப்படவுள்ளதுடன் ஜனாதிபதி கையெழுத்திட்டவுடன் அது சட்டமாக்கப்படும் நிலையில், பைட் டான்ஸ் கட்டாய விற்பனையை முடிக்க சீன அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

எனினும் பீஜிங் இதனை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. எனவே இந்த செயல்முறை பல ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

யுக்ரைன், இஸ்ரேல், தாய்வான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற அமெரிக்க பங்காளிகளுக்கு இராணுவ உதவியை உள்ளடக்கிய நான்கு யோசனை தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு 79 செனட்டர்கள் ஆதரவாகவும் 18 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles