NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,728 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 9,012 எனவும் குறிப்பிடப்பட்டள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles