உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றிய இவர் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்;டுள்ளார்.
அதன்படி சமீபத்தில் அவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது அவரது வீடு தீப்பிடித்துள்ளது.
அதன்படி தீயை அணைக்கும் பணியின்போது நீதிபதியின் வீட்டில் பணம் மற்றும் நகைகளும் இருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும், தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிஸசார் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
நீதிபதி வீட்டில் 11 கோடி ரூபா பணம் எரிந்து விட்டதாகவும், மேலும் 26 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.