இந்தியா தலைநகர் டெல்லி புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மகா கும்பமேளா விழாவில் கலந்ததுகொள்வதற்காக உத்தர பிரதேசம் நோக்கி செல்லும் புகையிரதங்களில் ஏற பயணிகள் முண்டியடித்தமையால், கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதுடன், சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.