NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தடகள போட்டிகளில் மேலுமொரு சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கிய இவர், இந்தப் போட்டியில் 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் படைத்துள்ளார்.

நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள நிலையில், ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் 433 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.

இதையடுத்து, உலக தடகள வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

Share:

Related Articles