முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் அறிவுறுத்தல்களையே தாம் பின்பற்றியதாக தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதியில் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
நிறுவன உரிமையாளர் சார்பில் நேற்று (28) மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரமவின் முன்னால் முன்னிலையான சட்டத்தரணி ஜாலிய சமரசிங்கவே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான மக்கள் பணத்தில் மருத்து மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னரே அறிந்திருந்தாரா என மாளிகாகந்த நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வினவினார்.
தரக்குறைவான மனித இம்யூனோகுளோபுலின் உடன்படிக்கையை மேற்கொள்ளுமாறு தமக்கு உத்தரவு பிறப்பித்ததாக, தமது கட்சிகாரர்களாக இருவர் வாக்குமூலம் வழங்கியபோதும், குற்றப்புலனாய்வுத்துறையினர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை சந்தேகநபராக பெயரிட தவறியுள்ளனர் என்று வழக்கில் சந்தேகநபர்கள் இருவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.