NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலதா மாளிகைக்கு திடீர் விஐயம் செய்த ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் ஜனாதிபதி, மல்வத்து பிரிவின் பெருந்தலைவர், வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், அஸ்கிரிய தரப்பு மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரர் ஆகியோரின் ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பில் முற்போக்கான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி கண்டி நகர திட்டத்தை ஆளுநர்களிடம் கையளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Share:

Related Articles