NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய்லாந்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் !

குறைந்த டீசல் வரி, சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுத் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிகள் உள்ளிட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான விரிவான நடவடிக்கைகளை தாய்லாந்தின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் ஆட்சிக்கு வந்த புதிய பிரதமர் ஷ்ரெட்டா தவிசின், தாய்லாந்து பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவுகளை எடுத்துள்ளார்.

மேலும், செப்டம்பர் 25 முதல் பெப்ரவரி இறுதி வரை, சீனா மற்றும் கஜகஸ்தான் சுற்றுலாப் பயணிகளை விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்குள் 28 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு. மேலும் 2024 ஆம் ஆண்டில் 40 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதே அடுத்த இலக்காக அந்நாடு கொண்டுள்ளது.

பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்திருந்தார்.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலை மற்றும் மின்சார விலையை அதிகரித்துள்ளமை விசேட நிகழ்வாகும்.

Share:

Related Articles