NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் தொடர் மின் துண்டிப்பு!

புதிய பெளத்த பிக்குகள் உட்பட சுமார் நோய்வாய்ப்பட்ட துறவிகள் சுமார் 200 பேர் தங்கியிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் நேற்று (24) மாலை இரண்டாவது தடவையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக திம்புலாகல புத்த ஸ்ராவக சங்க சபை பதிவாளர் திம்புலாகல தேரர் ராகுலுலங்கார தேரர் தெரிவித்தார்.

இதன் காரணமாக அங்கு தங்கியிருக்கும் பெளத்த பிக்குகள் பாரிய அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த 1954ஆம் ஆண்டு முதல் திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தை மின்சாரக் கட்டணம் செலுத்தாமல் முன்னாள் ஜனாதிபதிகள் விடுவித்துள்ளதுடன், இந்த ஆண்டு இரண்டாவது மின்வெட்டு காரணமாக யானை, புலி, கரடிகளுக்கு மத்தியில் வாழும் ஆரண்ய சேனாசனா பிக்குகளின் வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுமார் 57 இலட்சம் ரூபாவை அண்மித்த இந்த மின்கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய உதவிகளோஇ பணமோ இல்லாத காரணத்தினால், இந்த நிலைமையை கருத்திற்கொண்டு திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கு மின்கட்டணத்திலிருந்து தீர்வு அளிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் மின்சார அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

மின்கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தின் மாதாந்த மின்கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவாக இருந்த போதிலும் கட்டண அதிகரிப்பின் பின்னர் மாதாந்தம் நான்கரை முதல் 5 இலட்சம் ரூபா வரையான மின்கட்டணத்தைப் பெற்றுக்கொள்வதை சமாளிக்க முடியவில்லை’ என தெரிவித்தார்.

இதேவேளை, இதனை கருத்திற் கொண்டு திம்புலாகல ஆரண்ய சேனாசனத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் தலையீடுகளை திம்புலாகல ஆரண்ய சேனாசன பிக்குகள் கோரினர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மின்சார சபை அதிகாரிகள், ‘திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தின் மின்கட்டணம் ஏறத்தாழ 30 வருடங்களாக இலங்கை மின்சார சபையினால் செலுத்தப்பட்டு வருவதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு மின்சார பாவனையாளரும் மின்கட்டணத்தை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles