NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

ஆண்டியகல கிகுருவெவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்திருந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பெரிய தந்தங்களையும் மற்றும் வயதான யானை என்பது இந்த விலங்கின் சிறப்பு அம்சமாகும் என்பதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை தீக தந்து ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles